மதுரை எம்பி சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி 

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

விழுப்புரம்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டிருந்தார்.

நேற்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு இந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் சென்ற கட்சியினர், அவரை உடனடியாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .

தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோன்று சென்னை மத்திய மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் செல்வா என்பவரும் நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in