

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையின் முக்கிய வணிக பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: "வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கச் சென்று வர ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளின் இயக்கமானது நேற்று தொடங்கியது.
தொடர்ந்து, இன்று (ஜன.5), ஜன.11, 12 தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் அட்டவணை பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.