உளுந்தூர்பேட்டை அருகே மின் மாற்றியில் பழுது பார்த்தபோது மயக்கம்: உயிருக்கு போராடியவரை மீட்ட சக ஊழியர்கள்

எம்.குன்னத்தூர் கிராம மின் மாற்றியில் சிக்கிய ஏழுமலையை மீட்கும் சக  ஊழியர்கள்.
எம்.குன்னத்தூர் கிராம மின் மாற்றியில் சிக்கிய ஏழுமலையை மீட்கும் சக ஊழியர்கள்.
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தில் மின் மாற்றியில் பணி செய்து கொண்டிருந்தவர், திடீரென மயக்கமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உடனிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த எம்.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள எள்ளுப்பாறை அருகில் உள்ள துணை மின் நிலைய மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் நேற்று இதை சரிசெய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஊழியர் ஏழுமலை என்பவர் திடீரென மின் கம்பத்தின் அந்தரத்தில் தொங்கினார். அதை பார்த்த சக ஊழியர்கள் ஏழுமலைக்கு ஷாக் அடித்து விட்டது என அலறல் சத்தம் போட்டனர். இதையடுத்து ஏழுமலையின் இடுப்பில் கட்டி இருந்த கயிற்றை பிடித்து இழுத்து உடனடியாக மீட்டு அவருக்கு சில முதலுதவிகளை செய்தனர். அதன்பிறகே அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மின்மாற்றியில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏழுமலைக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதனால், அவர் அப்படியே மயங்கிய நிலையில், அந்தரத்தில் தொங்க, அவரை சக ஊழியர்கள் மீட்டு, இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in