தடையை மீறி யாத்திரை: மதுரையில் நடிகை குஷ்பு உள்பட பாஜக-வினர் கைது 

மதுரையில் தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையில் தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

மதுரை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்பட 500-க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு தானே சவுக்கால் அடித்து தண்டனை கொடுத்துக் கொண்டார். இதையடுத்து பாஜக மகளிரணி சார்பில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து பாஜக தாய்மார்களின் நீதி யாத்திரை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த யாத்திரை மதுரையில் இன்று (ஜன.3) தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாத்திரைக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.இருப்பினும் தடையை மீறி மதுரை செல்லத்தம்மன் கோயில் அருகே நீதி யாத்திரை காலை 10 மணிக்கு தொடங்கியது. பாஜக மாநில மகளிரணித் தலைவர் உமாரவி தலைமை வகித்தார்.

தேசிய மகளிர் ஆணைய முன்னாள் உறுப்பினர் நடிகை குஷ்பு யாத்திரையை தொடங்கி வைத்தார். இதையடுத்து குஷ்பு மற்றும் யாத்திரையில் பங்கேற்ற பாஜக மகளிர் அணியினரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக குஷ்பு பேசும்போது, “இந்த யாத்திரை ஒரு தொடக்கம் தான். நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in