Happy New Year | பிறந்தது 2025 - நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி கடற்கரை சாலையில் திறண்டிருந்த பொதுமக்கள் கூட்டம் | படம்: எம்.சாம்ராஜ்
புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி கடற்கரை சாலையில் திறண்டிருந்த பொதுமக்கள் கூட்டம் | படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

சென்னை: நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். சென்னையில் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு நிறைவடைந்து 2025-ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலில் இறங்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.

425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (பைக் ரேஸ்) தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளன.

'இந்து தமிழ் திசை' சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in