உயர் நீதி​மன்ற நிர்வாக பிரிவுக்கு 11 மாடிகளுடன் புதிய  கட்டிடம்: உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் திறந்து வைத்​தனர்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிர்வாக பிரிவுக்கான புதிய அடுக்குமாடி கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர். மகாதேவன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். அருகில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள்,  அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.  | படம்: எஸ்.சத்தியசீலன் | 

Updated on
1 min read

சென்னை: உயர் நீதி​மன்ற வளாகத்​தில் நிர்வாக பிரிவுக்கென 11 மாடிகள் கொண்ட புதிய அடுக்​கு​மாடி கட்டிடத்தை உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் நேற்று திறந்து வைத்​தனர். பாரம்​பரிய கட்டிடத்​தில் இயங்கி வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதி​மன்ற அறைகளுக்கு இணையாக நிர்​வாகப் பிரிவுடன் கூடிய பல்வேறு அலுவலகப் பிரி​வும் தனித்தனி அறைகளில் இயங்கி வந்தன. இதனால் ஏற்பட்ட இடநெருக்​கடியை கருத்​தில்​கொண்டு நிர்​வாகப் பிரிவுக்கென புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டது.

அதன்படி, எஸ்பிளனேடு நுழைவுவா​யில் பகுதி​யில் 11 அடுக்​கு​மாடிகளுடன் கட்டப்​பட்ட புதிய நிர்​வாகப் பிரிவு கட்டிடத்தை உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் எம்.எம்​.சுந்​தரேஷ், ஆர்.ம​காதேவன் ஆகியோர் நேற்று திறந்து வைத்​தனர். அதன்​பிறகு நடைபெற்ற விழா​வில் முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்​தப்​பட்​டது.

இந்நிகழ்​வில் பேசிய உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம், ‘‘நீ​தித்​துறை தனது நீதிபரிபாலனத்தை விரைவாக வழங்கிட நிர்​வாகத் துறை​யின் செயல்​பாடுகள் அவசி​ய​மானது மட்டுமின்றி, முக்​கிய​மானதும் கூட. நீதித்​துறை​யின் முது​கெலும்பாக உள்ள நிர்​வாகத் துறைக்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்த குறையை இந்த புதிய கட்டிடம் தீர்த்து வைத்​துள்ளது.

இந்த புதிய கட்டிடத்​தில் வழக்கு ஆவணங்​களின் பாது​காப்பு, நீதித்​துறைக்கான கணக்கு வழக்கு அலுவல​கங்​கள், தபால் துறை உள்ளிட்ட நிர்​வாகப் பிரிவு அலுவல​கங்கள் இயங்​கும். இந்த அடுக்​கு​மாடி கட்டிடம் அமைவதற்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி’’ என்றார். இந்நிகழ்வில் சென்னை உயர் நீதி​மன்ற மூத்த நீதிப​திகள் எஸ்.எஸ்​.சுந்​தர், ஆர்.சுப்​பிரமணி​யன், ஆர்.சுரேஷ்கு​மார் மத்திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல் சுந்​தரேசன், அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ் ராமன் உள்​ளிட்ட பலர் பங்​கேற்றனர்​.High Court

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in