கோவை கார் வெடிப்பு வழக்கில் 3 பேரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி

கோவை கார் வெடிப்பு வழக்கில் 3 பேரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி
Updated on
1 min read

கோவை: கோவை உக்கடம் பகுதியில் கார் வெடித்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இதுவரை 15 பேரை அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த அபு அனீபா, பவாஸ் ரகுமான், சரண் உள்ளிட்ட மூன்று பேரைதேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன் கைது செய்யப்பட்ட 3 பேரையும் 3 நாட்கள் என்ஐஏ போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் போலீஸ் காவல் முடிந்து, ஜன. 2 -ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதைய டுத்து என்ஐஏ அதிகாரிகள் 3 பேரையும் தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in