பெண்ணுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யாத “திராவிட பேரிடர் மாடல்” - அண்ணாமலை சாடல்

அண்ணாமலை | கோப்புப்படம்
அண்ணாமலை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமரசித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இன்று காலை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார் . தூத்துக்குடியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி. ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி. புதுமைப் பெண் திட்டத்தால் உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் உருவார்கள். அதன் காரணமாக தமிழகத்தில் தொழில் தொடங்க ஏராளமான வெளிநாட்டவர் இங்கே வருவார்கள். பாலின சமத்துவம் கூடும். குழந்தை திருமணம் குறையும். உயர் கல்வி கற்காத பெண்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கும் வரை ஓய மாட்டேன். புதுமைப் பெண்களே படிங்க, படிங்க, படிங்க. படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்துதர நான் இருக்கிறேன். அரசு இருக்கிறது.” எனக் கூறியிருந்தார். இதற்குத்தான் அண்ணாமலை எதிரிவினையாற்றியுள்ளார். மேலும் வாசிக்க>> கல்வியில், வேலைக்குச் செல்வதில் தமிழ்நாட்டுப் பெண்கள் ‘டாப்’ - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in