கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நேற்று நடந்தது. தேவாலயம்  வண்ண விளக்குகளால் ஜொலித்தது. | படம்; ம.பிரபு |
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நேற்று நடந்தது. தேவாலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. | படம்; ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு, தேவாலயங் களில் சிறப்பு ஆராதனை நடந்தது. இயேசு கிறிஸ்து பூமியில் மனிதராக பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில் கிறிஸ்துமஸ் இன்று (டிச.25) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நேற்று சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஏசுவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஆலயங்களிலும் ஆலயவளாகங்களிலும் வண்ண வண்ண நட்சத்திரங்கள் ஜொலித்தன. நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘‘கிறிஸ்துமஸ் பண்டிகை பாதுகாப்பின் ஒரு பகுதியாக சென்னையிலுள்ள சுமார் 350 தேவாலயங்களை சுற்றிலும் போலீஸார் ரோந்து வருகின்றனர். சென்னையில் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். காவல்துறை பணிக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in