

ஆழ்துளைக் கிணறு அமைக்க முன் அனுமதி பெறுவதற்காக தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்ட முன்வடிவை ரத்து செய்ய வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கரூரில் அக்கட்சியின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது:
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசியதுபோல இதுவரை எந்த பிரதமரும் மக்களை கவரும் வகையில் பேசியது கிடையாது. நாட்டு மக்கள் அனைவரும் தங் களது கடமையை உணர்ந்து செயல்பட்டு, நாட்டின் உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்றுமதியை அதி கரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பிரதமரின் அறிவிப்பால் கொங்கு மண்டலத்தில் ஜவுளி, கோழிப்பண்ணை, இன்ஜினி யரிங் தொழில் முன் னேற வாய்ப்புள்ளது. இந்த தொழில் வளர்ச்சி மூலம் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கரூர் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை மக்களவை துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட் டதற்கு எங்கள் கட்சி பாராட்டு தெரிவிக்கிறது.
கரூர் மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சாயப்பட்டறை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒருங் கிணைந்த சாயப் பூங்கா அமைக்க ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற நல்ல திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஆழ்துளைக் கிணறு அமைக்க பலகட்ட அனுமதி பெற வேண்டும் என்ற சட்ட முன்வடிவை உள்ளாட்சித் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இதனை சட்டமாக கொண்டு வந்தால் ஏழை விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள். எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும்.
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் சக்தி கோச் நடராஜனின் பேருந்து பாடி பில்டிங் நிறுவனம் மீது பெட்ரோல் குண்டை சிலர் வீசியுள்ளனர். அவர்களை காவல் துறையினர் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.