பெரியாரின் உண்மையான சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்: தவெக தலைவர் விஜய்

பெரியாரின் உண்மையான சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்: தவெக தலைவர் விஜய்
Updated on
1 min read

சென்னை: “அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in