ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டி: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல்

ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டி: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல்
Updated on
1 min read

ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக தனித்துப் போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நீதிமன்ற வாயில், மருத்துவமனை, பள்ளி என பல இடங்களில் கொலைகள் நிகழ்கின்றன. அனைத்துத் தரப்பினருமே பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர். ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்களை போராடவைத்துவிட்டு, சிறந்த ஆட்சி தருகிறோம் என்கிறார்கள்.

தமிழர்களின் அடையாளங்களை மறைத்துவிட்டு, பேருந்து நிலையம், நூலகம் என அனைத்து இடங்களுக்கும் கருணாநிதி பெயர் சூட்டப்படுகிறது. தேவையற்ற எந்த திட்டத்துக்கும் காங்கிரஸும், திமுகவும்தான் முதலில் கையெழுத்து போட்டிருக்கும்.

அமலாக்கத் துறை சோதனைக்குப் பயந்துதான் திமுக, அதிமுக கூட்டங்களில் பாஜகவுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை. நடிகர் விஜய் எனது தம்பி. திமுகதான் எனது எதிரி. ஈரோடு இடைத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் தனித்துப் போட்டியிடுவோம். இவ்வாறு சீமான் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in