Last Updated : 20 Dec, 2024 03:08 PM

2  

Published : 20 Dec 2024 03:08 PM
Last Updated : 20 Dec 2024 03:08 PM

பூ மார்க்கெட் ரெண்டுபட்டால் ஆளும் கட்சியினருக்கு திண்டாட்டம்!

படங்​கள்: எஸ்​. குரு பிர​சாத்

சேலம் சின்னக்கடை வீதியில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வஉசி பூ மார்க்கெட்டை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மார்க்கெட்டை குத்தகைக்கு எடுப்பதில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டியார் ஆதரவாளர்களும் அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆதரவாளர்களும் ஆளுக்கொரு பக்கம் படைதிரட்டினர். இறுதியில், அமைச்சர் ராஜேந்திரன் ஆதரவாளரான லோகேஷ் தரப்புக்கு பூ மார்க்கெட் டெண்டர் சிக்கியது.

இதையடுத்து, வீரபாண்​டி​யார் ஆதரவாளரான பூக்கடை ராஜி தரப்​பினர் அமைச்சர் நேருவை தனி ரூட்​டில் சந்தித்​துப் பேசி அவரது ஆசியுடன், மாநக​ராட்​சிக்கு சொந்​தமான விக்​டோரியா வணிக வளாகத்​தில் போட்டி பூ மார்க்​கெட்டை கடந்த 9-ம் தேதி திறந்​தனர். இதை வைத்​தும் இப்போது சர்ச்சை வெடித்​துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய லோகேஷ், “புதிதாக கட்டப்​பட்ட வஉசி பூ மார்க்​கெட்​டில் உள்ள 240 கடைகளுக்கு தினசரி வாடகை, பூ மூட்​டைகளுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்க ரூ.9.8 கோடிக்கு டெண்டர் எடுத்​துள்ளோம். இந்த டெண்டரை எடுக்க பூக்கடை ராஜி​யும் மோதி​னார். ஆனால், அவருக்​குக் கிடைக்க​வில்லை. அந்த ஆத்திரத்​தில் அமைச்சர் நேருவை சந்தித்​துப் பேசி அவரது சப்போர்ட்​டில் போட்டி பூ மார்க்​கெட்டை திறந்து எங்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்​கள்.

வஉசி பூ மார்க்​கெட்​டில் ராஜி தரப்​பினருக்காக 40 கடைகள் ஒதுக்கி வைத்​துள்ளோம். ஆனால், அவர்கள் டெண்டர் கைவிட்டுப் போனதைக் கவுரவ பிரச்​சினையாக எடுத்​துக் கொண்டு இந்த மார்க்​கெட்​டில் கடை போடாமல் போட்டி பூ மார்க்​கெட்டை திறந்​துள்ளனர். விக்​டோரியா வணிக வளாகத்​தில் அழுகும் பொருட்களை விற்பனை செய்​யக்​கூ​டாது என்று மாநக​ராட்​சி​யில் சிறப்புத் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

ஆனால், அதை மீறி அங்கு பூ மார்க்​கெட்டை திறந்​திருக்​கிறார்​கள். பூ மூட்​டைக்கு எங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்து​வதற்​கும் மறுத்து வருகிறார்​கள். போட்டி பூ மார்க்​கெட் திறந்​துள்ளதை எதிர்த்து திமுக மண்டலக்​குழு தலைவர்கள் தனசேகரன், அசோகன் தலைமை​யில் கவுன்​சிலர்கள் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடுத்​துள்ளனர். விரை​வில் நல்ல தீர்ப்பு வரும் என நம்பு​கிறோம்” என்றார்.

இதுகுறித்து பூக்கடை ராஜி​யிடம் கேட்​டதற்கு, “எனது தந்தை​யார் காலத்​தில் இருந்து நாங்கள் வீரபாண்​டி​யாரின் ஆதரவாளர்​களாக இருக்​கிறோம். பாரம்​பரிய திமுக-​வினரான எங்களுக்கு வஉசி பூ மார்க்​கெட்​டில் கடை ஒதுக்​கித் தரவில்லை. அதனால் நாங்கள் அமைச்சர் நேருவை சந்தித்துப் பேசி, விக்​டோரியா வணிக வளாகத்​தில் தலா ஒரு கடைக்கு ரூ.5 லட்சம் வீதம் ரூ.3.75 கோடி பணம் கட்டி 75 கடைகளை மாத வாடகைக்கு டெண்டர் எடுத்​துள்ளோம்.

அழுகும் பொருட்களை விற்​கக்​கூ​டாது என்ற மாநக​ராட்சி தீர்​மானத்தை, நகராட்சி நிர்​வாகத்​துறை​யின் முதன்​மைச் செயலாளர் ரத்து செய்த பிறகே நாங்கள் அங்கு பூ மார்க்​கெட்டை திறந்​துள்ளோம். வஉசி பூ மார்க்​கெட்டும் விக்​டோரியா வணிக வளாக​மும் நகராட்சி நிர்​வாகத்​துறை​யின் கீழ் வருவ​தால், துறை அமைச்சர் கே.என்​.நேருவை சந்தித்து கடைகளை பெற்​றோம். இந்த விஷயத்​தில் சுற்றுலாத்​துறை அமைச்சர ராஜேந்​திரனை அணுக வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட​வில்லை. மற்றபடி இதில் வேறெந்த அரசி​யலும் இல்லை” என்றார்.

இதுகுறித்து கருத்​துத் தெரி​வித்த திமுக-வைச் சேர்ந்த பூ வியா​பாரியான செந்​தில்​கு​மார், “வஉசி பூ மார்க்​கெட் விவகாரத்​தில் திமுக-​வினரே இரு பிரிவாக நின்று மோதிக்​கொள்வது அத்தனை ஆரோக்​கியமில்லை. ஒரே ஊரில் இரண்டு பூ மார்க்​கெட் இயங்​கி​னால் விவசா​யிகளுக்​கும், பூ வியா​பாரி​களுக்​கும் இடையில் வீண் குழப்பம் தான் மிஞ்​சும்” என்​றார். ஊரு ரெண்​டு​பட்​டால் கூத்​தாடிக்கு ​கொண்​டாட்​டம் என்​ப​தைப் ​போல் இங்கே பூ ​மார்க்​கெட் ரெண்​டு​பட்​ட​தால் ஆளும் கட்​சி​யினர் ​திண்​டாட்​டத்​தில் இருக்கிறார்​கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x