Published : 22 Aug 2014 12:32 PM
Last Updated : 22 Aug 2014 12:32 PM

ஐஸ் பக்கெட் சவாலை பிரபலப்படுத்திய இளைஞர் நீரில் மூழ்கி மரணம்

பொதுநல காரியங்களுக்காக நிதி திரட்ட, 'ஐஸ் பக்கெட் சாலெஞ்ச்' என்ற விளையாட்டை இணையத்தில் பிரபலமடைய செய்த இளம் கொடையாளர் கோரி க்ரிஃபின், டைவிங் விளையாட்டின்போது நீர்ல் மூழ்கி மரணமடைந்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நான்டுக்கெட் துறைமுகப்பகுதியில் உள்ள மிக பிரபலமான டைவிங் தளம் உள்ளது. புதன்கிழமை அன்று டைவிங் தளத்திலிருந்து குதித்த கோரி க்ரிஃபின், தண்ணீர் மூச்சு திணறி மரணமடைந்தார். கோரி க்ரிஃபினின் வயது 27.

பிரபல கொடையாளி ஆன கோரி க்ரிஃபின், அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis ) என்ற நோய் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள நிதி திரட்ட, ஐஸ் பக்கெட் என்கிற, பக்கெட் முழுவதிலும் உள்ள ஐஸ் கட்டிகளை தலையில் கொட்டிக்கொள்ளும் விளையாட்டைப் பிரபலப்படுத்தினார்.

அவர் பரப்பிய ஐஸ் பக்கெட் விளையாட்டில், பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பக், ஓப்ரா வின்ஃபரே, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என பிரபலங்கள் பலர் பங்கேற்றதால், இந்த விளையாட்டு இணையத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வைரலாக பரவியது.

இதனால் உலக அளவில் முன்னணி பிரபலங்கள் பலர் ஆர்வமாக இந்த சவாலை ஏற்று விளையாடி வருகின்றனர், ஐஸ் பக்கெட்டை இந்த அளவிற்கு பிரபலப்படுத்திய பெருமை கோரி க்ரிஃபினையே சேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x