‘மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தால் 2 கோடி பேர் பயன்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளியான ஈரோடு சுந்தராம்பாளுக்கு நேற்று மருந்துப் பெட்டகம் வழங்கி நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சு.முத்துசாமி, ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர்.
தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளியான ஈரோடு சுந்தராம்பாளுக்கு நேற்று மருந்துப் பெட்டகம் வழங்கி நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சு.முத்துசாமி, ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர்.
Updated on
1 min read

ஈரோடு: தமிழக அரசின் ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்​டத்​தால் 2 கோடி பேர் பயனடைந்​துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கூறினார்.

தமிழக அரசின் சுகா​தாரத் துறை சார்​பில் செயல்​படுத்​தப்​படும் ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்டம் 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இந்த திட்டத்​தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்​தம், இயன்​முறை சிகிச்சை, டயாலிஸிஸ் என்று தொற்றா நோய்​களில் பாதிக்​கப்​பட்​டோரின் வீடு​களுக்கே சென்று சிகிச்சை அளித்து, மருந்து வழங்​கப்​படு​கிறது. திட்​டத்​தில் பயனடைந்​தோர் எண்ணிக்கை 2 கோடியை தொட்​டுள்​ளது.

ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கிராமத்​தைச் சேர்ந்த சுந்​த​ராம்​பாள் (55) என்பவர் இத்திட்​டத்​தின் இரண்டு கோடி​யாவது பயனாளி​யா​வார். 2 நாள் பயணமாக ஈரோட்டுக்கு நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்​டா​லின், நஞ்சனாபுரம் சென்று சுந்​த​ராம்​பாளை சந்தித்து, மருந்​துப் பெட்​டகத்தை வழங்கி நலம் விசா​ரித்​தார். தொடர்ந்து, தொடர் சிகிச்​சை​யில் உள்ள வசந்தா (60) என்பவரை சந்தித்த முதல்​வர், அவருக்​கும் மருந்​துப் பெட்​டகம் வழங்​கினார். அப்போது, அமைச்​சர்கள் மா.சுப்​பிரமணி​யன், சு.முத்​துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்​டோர் உடனிருந்​தனர்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்​பிரமணியன் கூறும்​போது, “மக்​களைத் தேடி மருத்​துவம் திட்டம் மூலம் 2 கோடி பேரும், தொடர் சேவை என்ற வகையில் 4.29 கோடி பேரும் பயனடைந்​துள்ளனர். மக்களைத் தேடி மருத்​துவம் திட்​டத்​தில் 14,000-க்​கும் மேற்​பட்​டோர் பணிபுரி​கின்​றனர். கடந்த அதிமுக ஆட்சி​யில் மக்கள் பயன்​பாடு இல்லாத பகுதி​களில் 1,700 இடங்​களில் அம்மா கிளினிக் தொடங்​கப்​பட்​டது. ஓராண்டு ஒப்பந்த அடிப்​படை​யில் தொடங்​கப்​பட்ட இந்த திட்டம் முடிவுக்கு வந்து​விட்​டது. இந்த திட்​டத்​தால் மக்களுக்​குப் பயனில்லை.

அதே நேரத்​தில் திமுக ஆட்சி​யில் கொண்டு வரப்​பட்ட மக்களைத் தேடி மருத்​துவம் திட்​டத்​தைப் பாராட்டி ஐ.நா. சபை விருதுவழங்​கி​யுள்​ளது” என்றார். முதல்வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலைதளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதிவில், “நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்​களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்​ப​தில் புதுப் புரட்சி, ஐ.நா. அமைப்​பின் விருது எனச் சாதனைச் சரிதம் எழுதிவரும் ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்​டத்​தின் இரண்டு கோடி​யாவது பயனாளிக்கு மருந்​துப் பெட்​டகங்களை வழங்​கினேன்.

மருத்​துவ​மனைகளை நாடிச் செல்​லவோ, வீட்டுக்கு மருத்​துவர்களை வரவழைக்கவோ வசதி​யில்லாத எண்ணற்​றோருக்கு வீடு தேடிச் சென்று ‘பிசி​யோதெரபி’ அளித்து வாழ்​வில் ஒளியேற்றும் சாதனையை​யும் சப்தமின்​றிப் படைத்து வரும் இத்திட்​டத்​தின் வெற்றிக்​குக் காரணமான 14 ஆயிரம் மருத்​துவப் பணியாளர்​களுக்கு நன்றி” என்று தெரி​வித்​துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in