துணை முதல்வர் உத்தரவிட்டும் பழங்குடியினரை பாதுகாக்க தவறும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்!

காரைத்திட்டு அருகே பாலாற்றின் முகத்துவாரம் பகுதியில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ள இருளர் பழங்குடியினர்.
காரைத்திட்டு அருகே பாலாற்றின் முகத்துவாரம் பகுதியில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ள இருளர் பழங்குடியினர்.
Updated on
2 min read

செங்​கல்​பட்டு மாவட்டம் திருக்​கழுக்​குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்​சிக்​குட்​பட்ட காரைத்​திட்டு பகுதி​யில், ஏராளமான இருளர் பழங்​குடியின மக்கள் வசித்து வருகின்​றனர். இவர்​கள், பழங்​குடி​யினர் நலத்​திட்​டத்​தில் அப்பகு​தி​யில் அமைக்​கப்​பட்ட குடி​யிருப்பு​களில் வசித்து வருகின்​றனர். இந்நிலை​யில், காரைத்​திட்டு பாலாற்றின் முகத்து​வாரத்​தின் மிக அருகே பாலாற்​றங்​கரையோரத்​தில் உள்ள பனைமரங்​களுக்கு நடுவே, 40-க்​கும் மேற்​பட்ட குடிசை வீடுகள் அமைத்து இருளர் மக்கள் வசித்து வருகின்​றனர். இவர்​களின் பிள்​ளை​களை அருகில் உள்ள அரசு பள்ளி​களில் சேர்த்​துள்ளனர்.

குடிசைகள் அமைக்​கப்​பட்​டுள்ள பகுதி பாலாற்றில் அதிகள​வில் நீரோட்டம் ஏற்படும்​போது வெள்​ளத்​தில் மூழ்​கும் பகுதியாக உள்ளது. அப்பகு​தி​யில் பழங்​குடியின மக்கள் வசித்து வருவது அசம்​பா​விதங்கள் ஏற்பட வழிவகுக்​கும் என்ப​தால், அவர்களை பாது​காப்பான இடத்​தில் குடியமர்த்த பழங்​குடி​யினர் நலத்​துறை மற்றும் மாவட்ட நிர்​வாகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் பழங்​குடி​யினர் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

இந்நிலை​யில், சமீபத்திய ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து கேட்​டறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், பாலாற்​றங்​கரையோரம் வசித்து வரும் இருளர் பழங்​குடியின மக்களை பாது​காப்பான இடத்​தில் தங்கவைக்​கு​மாறும் புயல் பாதிப்பு நீங்​கியதும் அடிப்படை வசதி​களுடன் கூடிய நிரந்தர இடத்​தில் அவர்களை தங்கவைக்க ஏற்பாடுகளை செய்​யு​மாறும் அதிகாரி​களுக்கு உத்தர​விட்​டார்.

இதன்​பேரில், புயலின்​போது பாது​காப்பான இடத்​தில் தங்கவைக்​கப்​பட்ட இருளர் பழங்​குடி​யினர், புயல் நீங்​கியதும் பாலாற்றங்கரை​யிலேயே மீண்​டும் வசிக்​கின்​றனர். அதனால், துணை முதல்​வரின் உத்தரவை அமல்​படுத்​தும் வகையில் மேற்​கண்ட பகுதி​யில் வசிக்​கும் இருளர் மக்களை, நிரந்​தரமாக பாது​காப்பான இடத்​தில் தங்கவைக்க மாவட்ட நிர்​வாகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் பழங்​குடியின மக்கள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகு​தி​யில் வசிக்​கும் பழங்​குடியின மக்கள் கூறிய​தாவது: பாலாற்​றங்​கரை​யில் அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வரும் எங்களுக்கு, தன்னார்​வலர்கள் மற்றும் தொண்டு நிறு​வனங்கள் செய்​யும் உதவி​களை, அரசியல் காழ்ப்பு​ணர்ச்சி காரணமாக சிலர் தடுக்​கின்​றனர்.

இங்கு தங்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். மின்சார வசதி​யில்​லாத​தால் எங்களின் பிள்​ளை​கள், வீடு​களில் படிக்க முடி​யாமல் மின்​விளக்​குகள் இருக்​கும் இடத்தை தேடிச்​சென்று படிக்​கும் அவலம் உள்ளது. எங்கள் பிரச்​சினைகள் குறித்து யாரிட​மாவது பேசுவதற்கு கூட அச்சமாக உள்ளது. எங்கள் பிள்​ளை​களின் கல்வி பாதிக்​காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றனர்.

இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறிய​தாவது: வாயலூர் ஊராட்​சிக்​குட்​பட்ட காரைத்​திட்டு அருகே பாலாற்​றங்​கரை​யில் குடிசைகளில் வசிக்​கும் இருளர் பழங்​குடியின மக்களை, அரசு திட்​டத்​தின் கீழ் மாற்று இடங்​களில் தங்க வைப்பதற்காக அடையாள அட்டைகளை கேட்​டுள்​ளோம்.

இதில், 9 குடும்பத்​தினரிடம் ஆதார் உட்பட அடையாள அட்டை இல்லாத​தால் பல்வேறு நிர்வாக சிக்கல் ஏற்​பட்​டுள்​ளது. எனினும், மற்​றவர்​களிடம் ​மானாம்பதி மற்றும் பூஞ்​சேரி பகு​தி​யில் வசித்ததற்கான அடை​யாள அட்​டைகள் உள்ளன. அத​னால், உரிய நடவடிக்கை மேற்​கொள்​வதற்கான ​முதற்​கட்ட பணி​கள் நடைபெற்​று வருகிறது என்றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in