Published : 31 Jul 2018 08:05 AM
Last Updated : 31 Jul 2018 08:05 AM

கருணாநிதியை முதல்வர், துணை முதல்வர் பார்த்தனர்; காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர்களுடன் சென்றனர்: சரத்பவார், ஜக்கி வாசுதேவ், இலங்கை அமைச்சர்களும் நலம் விசாரித்தனர்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்த் தனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

உடல்நலக் குறைவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டி லேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த 27-ம் தேதி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சல், ரத்த அழுத்தம் குறைவு ஆகியவற்றுக்காக அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் நலம் விசாரித்தனர்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகி யோர் கருணாநிதியை நேற்று முன் தினம் காலை நேரில் பார்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணா நிதியை அவர்கள் பார்க்கும் படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள் ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களும் மருத்துவ மனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் அவரது உடல்நிலையில் திடீரென பின்ன டைவு ஏற்பட்டது. இதயத்துடிப்பு குறையத் தொடங்கியது. இதை யடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட குடும் பத்தினர் அனைவரும் மருத்துவ மனைக்கு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மருத் துவமனைக்கு வெளியே திரண்டி ருந்த தொண்டர்கள் கதறி அழத் தொடங்கினர். கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக செய்திகள் பரவத் தொடங்கியதும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர். இதனால், கூட் டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் லேசான தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், மருத்துவ நிபுணர் களின் தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலை சீராகத் தொடங்கியது. இரவு 9.50 மணிக்கு காவேரி மருத் துவமனை வெளியிட்ட அறிக் கையில், ‘ கருணாநிதியின் உடல் நலத்தில் ஏற்பட்ட சிறிய பின்ன டைவுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராகி வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டது.

கருணாநிதியின் உடல்நிலை யில் பின்னடைவு ஏற்பட்ட செய்தி வெளியான நிலையில் சேலத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு முதல்வர் பழனிசாமி நேற்று முன் தினம் நள்ளிரவு சென்னை திரும்பி னார். நேற்று காலை 9.58 மணிக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், அமைச்சர்கள் கே.ஏ.செங் கோட்டையன், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்த னர். நேராக தீவிர சிகிச்சை பிரி வுக்கு சென்ற பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் கருணாநிதியை நேரில் பார்த்தனர். கருணாநிதிக்கு அளிக் கப்படும் சிகிச்சை குறித்து மருத்து வர்கள் அவர்கள் இருவரிடமும் எடுத்துரைத்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந் தித்த முதல்வர் பழனிசாமி, ‘‘நானும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கருணாநிதியை நேரில் பார்த்தோம். ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் எங்களுடன் இருந்தனர். கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத் துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்" என்றார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, செல்லூர் கே.ராஜூ, ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், சமக தலைவர் சரத் குமார், நாஞ்சில் சம்பத், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், கவிஞர் வைரமுத்து, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, நடிகர்கள் சிவகுமார், சூர்யா, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் காவேரி மருத் துவமனையில் ஸ்டாலின், கனி மொழியை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக் கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இலங்கை தொழிலாளர் காங் கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்ட மான் எம்.பி. தலைமையில் அமைச் சர்கள் செந்தில் தொண்டமான், எம்.ராமேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று மாலை மருத்துவ மனைக்கு வந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர். அப்போது, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் கடி தத்தை ஸ்டாலினிடம் அளித்தனர். அதில், ‘கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணியை தொடர வேண்டும்’ என சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி, ராசாத்தி அம்மாள் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்களும் பெரும் பாலான நேரங்களில் மருத் துமனையிலேயே இருந்தனர்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், காவேரி மருத்துவ மனை முன்பு திரண்டு ‘எழுந்து வா தலைவா' என தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்தனர்.

கருணாநிதி நலம்பெற வேண்டி தொண்டர்கள் சிலர் மருத்துவ மனை முன்பு மொட்டை அடித்துக் கொண்டனர். கருணாநிதி உடல் நலம் பெற நேற்று தமிழகம் முழு வதும் திமுக தொண்டர்கள் கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் வழிபாடு, பிராத்தனை செய்தனர். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற் றும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார்.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ஸ்டாலின், ‘‘கருணாநிதி தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x