புதுச்சேரி: 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர் வங்கிக் கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் பட்டுவாடா

புதுச்சேரி: 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர் வங்கிக் கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் பட்டுவாடா
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், ஏனாமைச் சேர்ந்த 3.54 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் இன்று (டிச.12) பட்டுவாடா செய்யப்பட்டது. இதற்காக ரூ. 177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் பெஞ்சல் புயலால் பாதித்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இந்த நிவாரண நிதிக்கான கோப்பு நிதித்துறை மூலம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அனுமதி அளித்தார்.

இந்த நிவாரண நிதி இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் உத்தரவின்பேரில் மாநில அரசு நிதியில் இருந்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிவாரணத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் இன்று முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி மாஹே பிராந்தியத்தை தவிர்த்து, புதுச்சேரி, காரைக்கால், ஏனாமை சேர்ந்த 3 லட்சத்து 54 ஆயிரத்து 726 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.177 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் நிவாரண நிதி மாநில அரசு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in