Published : 25 Aug 2014 08:44 AM
Last Updated : 25 Aug 2014 08:44 AM

ஐ.நா. சபையில் ராஜபக்சவை பேச அனுமதிக்கக்கூடாது: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

ஐ.நா.சபையில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறும் கூட்டத் தில் பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண் டனம் தெரிவித்துள்ளார். அந்த அழைப்பினை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா. அமைப் புக்கு அனைத்து தமிழ் அமைப்பு களும் பொதுமக்களும் வலியு றுத்த வேண்டும் என அவர் தெரி வித்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர் களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டி யளித்தார். அவர் கூறியதாவது:

இலங்கை நாடாளுமன்ற தமிழ் எம்.பி.கள் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ள னர். இலங்கையில் தற்போது நிலவும் இன அழிப்பு நடவடிக்கை களை தடுக்க இந்திய அரசு உதவ வேண்டும். ஈழத் தமிழர்க ளுக்கு எத்தகைய அரசியல் தீர்வு வேண்டும் என்பதை பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றபடி அரசியல் தீர்வுக்கு இந்திய அரசு உதவ வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை அமைப் பின் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் இந்தியா மற்றும் இலங்கையில் ஐ.நா. விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகி இருக்கிறது. எனினும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் புகை படங்கள், காட்சிகள் போன்ற வற்றை ஈழ தமிழர்கள் லண்டனில் உள்ள ஐ.நா. குழுவுக்கு புகாராக தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி அனுப்பலாம்.

ஐ.நா.சபையில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இலங்கை அதிபர் மீது போர் குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்ற சாட்டுகள் கூறியுள்ள நிலையில் அவரை ஐ.நாவில் பேச அழைத்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடி யாது. உடனடியாக அந்த அழைப்பை திரும்ப பெற வேண் டும் என்று ஐ.நா அமைப்பிடம் அனைத்து தமிழ் அமைப்புகளும் பொதுமக்களும் வலியுறுத்த வேண்டும்

அண்டை மாநிலமான கேர ளாவில் மதுவிலக்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் ஏற்படும் இழப்புகளை கனிம வளங்களை அரசே ஏற்று நடத்துவதன் மூலம் ஈடு செய்ய முடியும்.

புலி பார்வை திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அந்த படத்தின் இயக் குநர் தெரிவித்துள்ளார். அந்தப்பட இசை வெளியீட்டு விழாவில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு, காட்சிகள் நீக்கப்பட்ட படத்தை போட்டு அவர்களின் ஓப்புதல் பெற்ற பின்பே படத்தை வெளியிட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x