டிஜிட்டல் ஆவணங்​களின் நகல் கோரி தாக்கல் செய்த செந்தில் பாலாஜி மனு மீது டிச.16-ல் நீதி​மன்றம் உத்தரவு

டிஜிட்டல் ஆவணங்​களின் நகல் கோரி தாக்கல் செய்த செந்தில் பாலாஜி மனு மீது டிச.16-ல் நீதி​மன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை தரக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீது வரும் டிச.16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜி்ட்டல் ஆவணங்களின் நகலை தரக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார்.

செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கு, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் பதில்மனுவை தாக்கல் செய்தார்.

அதில், செந்தில் பாலாஜி வசமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் அனைத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டவை என்றும், அந்த ஆவணங்கள் எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளதால் அவற்றை அமலாக்கத் துறையால் வழங்க இயலாது என்றும் தெரிவித்து இருந்தார். அதையடுத்து நீதிபதி, செந்தில் பாலாஜியின் மனு மீது வரும் டிச.16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in