கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: பொன்.குமார் வலியுறுத்தல்

திருச்சியில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார்.  படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சியில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார். படம்: ர.செல்வமுத்துகுமார்
Updated on
1 min read

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார் வலியுறுத்தியுள்ளார்.

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான பொன்.குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் அதிக வேலைவாய்ப்பைத் தரும் கட்டுமானத் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சிமென்ட்க்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாடு காரணமாக எம்.சாண்ட் விலை உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும்.

இக்குழுவினர் 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். முதல்வர் இதில் தலையிட்டு விலையைக் குறைக்க உரிய கவனம் செலுத்த வேண்டும்.

வைரத்துக்கும், பிளாட்டினத்துக்கும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டுமானத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும் என கோரினால், அதற்குப் பதிலாக கட்டுமானத் தொழில் செய்வோரின் அலுவலகத்துக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்தும், ஜிஎஸ்டியைக் குறைக்க வலியுறுத்தியும் டிச.20-ம் தேதி திண்டுக்கலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in