ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிக்காக விடுதலை சிறுத்தைகள் ரூ.10 லட்சம் நிதி

ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிக்காக விடுதலை சிறுத்தைகள் ரூ.10 லட்சம் நிதி
Updated on
1 min read

சென்னை: ஃபெஞ்சல் புயல் மீட்புப் பணிக்காக விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: அண்மையில் தமிழகத்தை தாக்கிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இப்பேரிடரில் இருந்து மக்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் விசிக சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விசிக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலா ஒரு மாத சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டு மாத சம்பளத்தை கொண்டு இந்த நிதி முதல்வரிடம் வழங்கப்படும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in