Published : 06 Aug 2014 07:06 PM
Last Updated : 06 Aug 2014 07:06 PM

நெரிசலில் சிக்கி திணறும் புதுச்சேரி சண்டே மார்க்கெட்: அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதி

புதுச்சேரியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயங்கும் சண்டே மார்க்கெட்டில் அடிப் படை வசதிகள் இல்லை. ஆயிரக் கணக்கான மக்கள் வரும் இந்த பகுதிக்குள் கார், ஆட்டோ போன்ற வாகனங்களையும் அனுமதிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. இது போன்ற குறைகள் குறித்து >‘தி இந்து’ நாளிதழின் உங்கள் குரல் பகுதியில் பல்வேறு வாசகர்களும் புகார்களை தெரி வித்தனர். இதையடுத்து, சண்டே மார்க்கெட் பகுதியான புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையை சுற்றிப் பார்த்தபோது கழிவறை வசதி இன்மை உள்பட பல்வேறு குறைகள் காணப்பட்டன.

புதுச்சேரியில் கடந்த 1974ம் ஆண்டு 40 கடைகளுடன் தொடங்கப் பட்டது, சண்டே மார்க்கெட். அதன் பிறகு 1980ல் சண்டே மார்க்கெட் இயங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு சரியானது. புதுச்சேரி சில்லறை வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றும் சண்டே மார்க்கெட்டில் தற்போதைய கடைகளின் எண்ணிக்கை 1380. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் எம்ஜி ரோடு எனப்படும் சுமார் 3 கி.மீட்டர் நீள முள்ள மகாத்மா காந்தி சாலையில் சண்டே மார்க்கெட் இயங்குகிறது. புதுச்சேரி, திருச்சி, கடலூர், விழுப் புரம், திண்டிவனம், செஞ்சி, சென்னை, சேலம் என பல்வேறு ஊர்களை சேர்ந்த வர்த்தகர்கள் வாரந்தோறும் இங்கு வந்து கடைகளை அமைக்கின்றனர்.

சென்னையைச் சேர்ந்த சங்கரன் கூறும்போது, "சனிக்கிழமை மாலையே விடுதியில் அறை எடுத்து தங்கி பொருட்களை கொண்டு வருவோம். ஞாயிற்றுக் கிழமை காலை முதல் பொருட் களை விற்பனை செய்யத் தொடங் குவோம். இங்கு அனைத்து பொருட் களையும் குறைந்த விலையில் வாங்கலாம். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து பொருட் களை வாங்கிச் செல்கின்றனர். கைக்குட்டை, லுங்கி, பனியன் முதல் சேலை, சுரிதார் வரை அனைத்து வகை துணிகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், அழகு சாதன பொருட்கள், பழைய எலக்டிரானிக் பொருட்கள் என அனைத்தும் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் சண்டே மார்க்கெட்டுக்கு மிக அதிக மவுசு உண்டு" என்று குறிப்பிட்டார்.

புதுவை சண்டே மார்க்கெட்டுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி உள் நாடு மற்றும வெளிநாட்டு சுற் றுலா பயணிகளும் அதிக அள வில் வருகின்றனர். வெளிநாட்டி னரையும் கவரும் இந்த சண்டே மார்க்கெட்டில் அடிப்படை வசதி கள் என்று பார்த்தால் ஒன்று கூட கிடையாது. இதனால், நீண்ட நேரம் ஷாப்பிங் செய்யும் பொது மக்கள் அனைவரும் மிகவும் அவதிப் படுகின்றனர். குறிப்பாக குழந்தை கள் மற்றும் பெண்களின் நிலைமை மிகவும் திண்டாட்டமாக உள்ளது.

இது குறித்து சண்டே மார்க்கெட் வர்த்தகர்கள் தரப்பில் கூறும்போது, “சண்டே மார்க்கெட்டை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறு கின்றன. வாரம் ஒரு முறை ஞாயிற் றுக் கிழமை காலை முதல் இரவு வரை சண்டே மார்க்கெட் இயங்கும். சண்டே மார்க்கெட்டுக்காக சதுர அடிக்கு ரூ.5 கட்டணமாக புதுச்சேரி நகராட்சிக்கு செலுத்துகிறோம். ஆனால், சண்டே மார்க்கெட்டில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் கிடை யாது. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இப்பகுதியில் பாது காப்பையும் அதிகப்படுத்த வேண் டும். இரவு வர்த்தகம் முடிந்து செல் லும் வரை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினால் நல்லது. நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்து கிடைக்கும் பணத்தை இழக் கும் சம்பவங்களும் அடிக்கடி நடந் துள்ளன" என்று குறிப்பிடுகின்றனர்.

சண்டே மார்க்கெட்டில் பொருட் களை வாங்கும் பொதுமக்கள் கூறும் போது, “சண்டே மார்க்கெட்டில் பேரம் பேசினால் குறைந்த விலை யில் பொருட்களை வாங்க முடியும். குழந்தைகளுடன் பெண்கள் அதி களவில் வருவார்கள். ஆனால், கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த போதிலும், இந்த சாலை வழியாக ஆட்டோ, கார், டூ வீலர்கள் என அனைத்து வாகனங்களையும் அனு மதிப்பதால் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஞாயிற்றுக்கிழமை முழுவ தும் கார், ஆட்டோ போன்ற வாகனங் களை போலீஸார் அனுமதிக்காமல் இருக்கலாம். மேலும், மாலை 4 மணி முதல் இரவு வரை டூ வீலர்கள் செல்லவும் கட்டுப்பாடு விதித்தால் நிம்மதியாக ஷாப்பிங் செய்ய முடியும்” என குறிப்பிடுகின்றனர்.

இது தவிர, தமிழகத்தில் நடை பாதை வியாபாரிகளுக்கு தனி நல வாரியம் அமைத்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை போல, புதுச்சேரி அரசும் நடைபாதை வியா பாரிகளுக்கு தனி நலவாரியம் அமைத்து தர வேண்டும் என்பதும் இங்குள்ள வியாபாரிகளின் கோரிக் கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x