மெரினாவில் ரோப் கார்: மாநகராட்சி திட்டம்

மெரினாவில் ரோப் கார்: மாநகராட்சி திட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிக்கை அளிக்க ஆலோசகரை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

உலகின் 2-வது நீளமான (13 கி.மீ.) கடற்கரை என்ற பெருமைக்குரியது சென்னை மெரினா. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. அணிவகுத்து நிற்கும் தலைவர்களின் சிலைகள், வகை வகையான சிற்றுண்டியகங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள்.

இந்நிலையில், பொதுமக்களை கவரும் விதமாக மெரினாவில் ரோப் கார் சேவை தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளையும் தொடங்கியுள்ளது.

அதன்படி, ரோப் கார் வடிவமைப்பு, சேவையின் வழித்தடம், பயனாளிகளின் கருத்துகள், எதிர்பார்ப்புகள், திட்ட மதிப்பீடு, நிலப்பரப்பு, புவியியல் ஆய்வுகள் உள்ளிட்டவை குறித்து நவீன தொழில்நுட்பங்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்து விரிவாக அறிக்கை அளிப்பதற்காக ஆலோசகரை நியமிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான டெண்டரும் கோரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in