“நேரில் வந்து நிவாரணம் வழங்கி இருக்கலாம், ஆனால்...” - விஜய் கூறிய காரணம்

“நேரில் வந்து நிவாரணம் வழங்கி இருக்கலாம், ஆனால்...” - விஜய் கூறிய காரணம்
Updated on
1 min read

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 250 குடும்பத்தினரை வரவழைத்து, அவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை தவெக தொண்டர்கள் செய்யுமாறு விஜய் அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 250 குடும்பத்தினரை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்துக்கு கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் மழை பாதிப்பு குறித்து விஜய் சிறிது நேரம் உரையாடினார். அப்போது, “உங்கள் பகுதிக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்கியிருக்கலாம். ஆனால், இவ்வாறு உங்களிடம் சகஜமாக இப்படி அமர்ந்து பேச முடியாது. நெரிசல் ஏற்பட்டுவிடும். அதனால்தான் இங்கு அழைத்து வழங்குகிறேன். எனவே, நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர்களுக்கு வேஷ்டி, சேலை, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்டவற்றை விஜய் வழங்கினார். நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in