Published : 30 Nov 2024 05:06 PM
Last Updated : 30 Nov 2024 05:06 PM
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிய காட்சிகள் இதோ..
1. பெரம்பூர் ஹைரோடு: ஸ்டீபென்சன் சாலைக்குச் செல்லும் பெரம்பூர் ஹைரோட்டிலும் மழைநீர் தேங்கி நின்றது.
2. திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸின் பெசன்ட் சாலை மழைநீர் சூழ்ந்திருந்தது.
3. கொரட்டூர்: கொரட்டூர், தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரிய காலனி இரண்டாவது தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. அதில் வாகனங்கள் சிரமத்துடன் செல்லும் காட்சி.
4. திருவான்மையூர் பேருந்து நிலையம்: திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
5. எஸ்பிளனேடு காவல் நிலையம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையினால் சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தினுள் மழைநீர் புகுந்தது.
6. பல்லாவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் தேங்கியும், அதில் வாகனங்கள் மிதந்தும் வந்த காட்சி.
7. அரும்பாக்கம்: அரும்பாக்கம் 100 அடி சாலையில் தண்ணீர் தேங்கி நின்ற காட்சி.
8. பாந்தியன் சாலை: சென்னை பாந்தியன் சாலையில் தேங்கி நின்ற மழைநீரும், சிரமத்துடன் செல்லும் வாகனங்களும்.
9. காந்தி இர்வின் சாலை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள காந்தி இர்வின் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.
10. பெரம்பூர் ஹைரோடு: பெரம்பூர் ஹைரோட்டில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீர்.
11. மேடவாக்கம்: மேடவாக்கம் ஹைரோட்டில் தேங்கிய மழைநீரில் தவழ்ந்தபடி செல்லும் வாகனங்கள்.
12. பட்டாளம்: பட்டாளம் பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீரில் சிரமத்துடன் கடந்து செல்லும் பொதுமக்கள்.
13. பிராட்வே: சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.
14. டெம்மெல்லோஸ் சாலை: டெம்மெல்லோஸ் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரும், கடந்து செல்லும் பொதுமக்களும்.
15. மழைநீரும் சென்னை போக்குவரத்தும்: ஃபெஞ்சல் புயலினால் பெய்துவரும் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் முழங்கல் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரில் ஊர்ந்துசெல்லும் இருசக்கர வாகனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT