கனமழை எதிரொலி: குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து

கனமழை எதிரொலி: குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து
Updated on
1 min read

திருவாரூர்: திருவாரூரில் நாளை (நவ.30) நடைபெறும் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரவிருந்த குடியரசுத் தலைவரின் பயணம், கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். உதகையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் திருவாரூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in