Last Updated : 28 Nov, 2024 10:53 AM

16  

Published : 28 Nov 2024 10:53 AM
Last Updated : 28 Nov 2024 10:53 AM

தள்ளுபடியாகும் ஆதார் முகவரி மாற்ற மனுக்கள்! - ஆதார ஆவணங்களையே நிராகரிக்கும் ஆணையம்

ஆதாரில் முகவரி மாற்றம், திருத்தத்துக்கு விண்ணப்பித்தால், நிர்ணயிக்கப்பட்ட ஆதார ஆவணங்களையே ஏற்க மறுத்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஆதாரை பொறுத்​தவரை, பெயரில் திருத்தம் செய்வதற்கு இருமுறை மட்டுமே வாய்ப்பு அளிக்​கப்​படு​கிறது. முகவரியை எத்தனை முறை வேண்டு​மா​னாலும் மாற்றிக் கொள்ளலாம். தற்போதைய பிரச்​சினையே பெயர், முகவரி மாற்றம் தான். பெயரை பொறுத்​தவரை, இனிஷியலை முன்னால் போடுவதா, பின்னால் போடுவதா, புள்ளி வைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் உள்ளது. ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் போது, பெயர், இனிஷியலில் சிக்கல் வருகிறது.

பான் அட்டையில் உள்ள பெயர் அடிப்​படையில் ஆதாரில் மாற்றம் செய்தால், வங்கிக்​கணக்கு, வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஒத்துப்​போ​காமல் சிக்கல் எழுகிறது. அதேபோல் ஆதாரில் முகவரி மாற்றம் செய்வதும் சமீபகாலமாக அவ்வளவு எளிதாக இல்லை.

குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய, அதற்கான ஆதார ஆவணங்களை உள்ளீடு செய்தால் அதிகபட்சம் ஒரு மாதத்​துக்குள் மாற்றம் நிகழ்​கிறது. ஆனால், ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய நிர்ண​யிக்​கப்பட்ட அடையாள ஆவணம் மற்றும் முகவரிக்கான ஆவணங்களை உள்ளீடு செய்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்​படு​கிறது.

ஆதார் ஆணையம், அடையாள ஆவணமாக 27 ஆவணங்களை குறிப்​பிட்​டுள்ளது. அதில் பாஸ்போர்ட், பான் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. Aadhaar address change அதே போல், முகவரிக்கான ஆதாரமாக 25 ஆவணங்களை குறிப்​பிட்​டுள்ளது. இதில் கூடுதலாக, மக்கள் பிரதி​நி​திகள், குரூப் ஏ பிரிவு தாசில்​தார், குரூப் பி பிரிவு அரசிதழ் பதிவு​பெற்ற அதிகாரிகள், எரிவாயு இணைப்பு கட்டண ரசீது உள்ளிட்​ட​வையும் இடம் பெற்றுள்ளன.

அரசு இ-சேவை மையங்கள், வங்கிகள், அஞ்சல​கங்​களில் ஆதாரில் திருத்​தங்கள் மேற்கொள்ள முடியும். இதுதவிர, ஆன்லைன் வாயிலாக நாமே உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தும் திருத்தம் செய்ய முடியும். ஆனால், சமீபகாலமாக முகவரி மாற்றத்​துக்கு விண்ணப்​பி்த்​தால், ஆதார ஆவணம் சரிபார்த்தல் என்ற நிலையில் மாதக்​கணக்கில் இழுத்​தடித்து, இறுதியாக, ஆவணம் சரியில்லை என விண்ணப்பம் நிராகரிக்​கப்​பட்டு வருகிறது.

இதுகுறித்து, இ-சேவை மைய ஊழியர்​களிடம் கேட்ட​போது, “ஆதார ஆவணங்​களில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை மட்டுமே ஏற்கப்​படு​கிறது. மருத்​துவர்கள், கெசட்டட் அதிகாரிகள் உள்ளிட்டோர் அளிக்கும் சான்றுகள் ஏற்கப்​படு​வ​தில்லை. சரியான ஆவணங்கள் இருந்தால் ஓரிரு வாரத்தில் அப்டேட் ஆகிறது” என்றனர்.

இது ஒருபுறமிருக்க, ஆதாருக்கான முகவரி மற்றும் அடையாள ஆவணமாக அங்கீகரிக்​கப்​பட்​டுள்ள குடும்ப அட்டை​யிலும், பெயர் குறிப்​பிடு​வதில் பல்வேறு குழப்​பங்கள் உள்ளன. அதில், குடும்பத் தலைவருடைய பெயருடன் தந்தை அல்லது கணவர் பெயர் இருப்​ப​தால், அதை வைத்து ஆதாரில் திருத்​தங்கள் செய்வதும் கடினமாக இருக்​கிறது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து விவா​தித்து பெயர், முகவரி மாற்றம் ஆகியவற்றில் சரியான நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எ​திர்​பார்​ப்​பும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x