மறைமலை அடிகளின் பேத்திக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி: இபிஎஸ் அறிவிப்பு

மறைமலை அடிகளின் பேத்திக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி: இபிஎஸ் அறிவிப்பு
Updated on
1 min read

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் பேத்திக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மறைமலை அடிகளாரின் மகன் வழி பேத்தி லலிதா(43), தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52) மாவு மில்லில் வேலைபார்த்து வருகிறார். வாடகை வீட்டில் வசித்துவரும் லலிதா, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருக்க வீடு வழங்க வேண்டும் என்றும், மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்றும் மனு அளித்தார்.

இது தொடர்பான செய்தி நேற்று வெளியான நிலையில், வறுமையில் வாடும் லலிதாவின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதற்கான உத்தரவு கடிதத்தை லலிதா, அவரது கணவர் செந்தில்குமார் ஆகியோரிடம் அதிமுக தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன் நேற்று வழங்கினார். இதற்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, லலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in