தமிழக மீனவர்கள் 23 பேருக்கு இரண்டாவது முறையாக டிச.3 வரை காவல் நீட்டிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் 23 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் இரண்டாவது முறையாக டிச.3 வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவ.9-ல் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப், டைதாஸ், டென்னிஸ், ஆனந்த், அமலதீபன், சுவிதர், கிறிஸ்துராஜா, விஜய், ஜனன், லின்கdன்,சர்மிஸ், சுதாஸ், மார்ஷல் டிட்டோ, தயாளன், தாமஸ் ஆரோக்கிய ராஜ், ஜான் பிரிட்டோ, ஜெயராஜ், சண்முகவேல், அருள், கிங்ஸ்லி ஆகிய 23 மீனவர்கள் கைது செய்யய்பட்டனர்.

23 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் திங்கள்கிழமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து 23 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் டிச.3 வரையிலும் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in