தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? - இபிஎஸ் கேள்வி

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தின் போது, சட்டத்துக்கு உட்பட்டு அதிமுக ஆட்சி செயல்பட்ட போதும், “மனித உரிமை” என்ற சொல்லையே தாம் தான் கண்டுபிடித்தாற்போல் வானத்துக்கும் பூமிக்கும் முழங்கிய மு.க.ஸ்டாலின், இன்று அவரது ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று புதுக்கோட்டையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “புதுக்கோட்டையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சியில் ஒருபுறம் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கைக் காக்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில்லை. மறுபுறம் காவல் நிலைய மரணங்கள் என்பதும் தொடர்கதையாகி உள்ளது.

சென்னையில் நடந்த விக்னேஷ் (எ) விக்னா காவல் நிலைய மரணத்தின் போது நான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய போதே, பச்சைப்பொய் பேசியவர் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். காவல் நிலைய மரணங்கள் தொடர்வதும், அதனை திமுக அரசு அதன் அதிகாரத்தைக் கொண்டு மூடி மறைக்க முயல்வதும் கண்டனத்துக்குரியது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தின் போது, சட்டத்துக்கு உட்பட்டு அதிமுக ஆட்சி செயல்பட்ட போதும், “மனித உரிமை” என்ற சொல்லையே தாம் தான் கண்டுபிடித்தாற்போல் வானத்துக்கும் பூமிக்கும் முழங்கிய மு.க.ஸ்டாலின், இன்று அவரது ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in