Published : 04 Jun 2018 07:43 PM
Last Updated : 04 Jun 2018 07:43 PM

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தபின் பேச்சு வார்த்தையா?- காமெடி செய்கிறாரா கமல்: முத்தரசன் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு எல்லோரும் ஒருமித்த குரலில் நீரை திறந்துவிட கோரிக்கை வைத்திருக்கும் நேரத்தில் மீண்டும் பேச்சு வார்த்தை என்று ஆரம்பிப்பதா என்று நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

மக்கள் நீதிமையத்தின் சார்பில் நடிகர் கமலஹாசன் இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களுரு சென்று சந்தித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் சந்திப்புக்கு பின் செய்தியளர்களிடம் பேசிய கமலஹாசன் “காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், இது குறித்து தொடர்ந்து பேசி தீர்வுகாண வேண்டும் என்று கூறியுள்ளதாகவும்” செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரி நதிநீர் பகிர்வுக்காக சென்னை மாகாண அரசும், மைசூர் அரசும் 1892 மற்றும் 1974 ஆண்டுகளில் செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவை எனஉச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 1974 ஆம் ஆண்டு புதுப்பித்திருக்க வேண்டிய காவிரி நதிநீர் பங்கீடுஒப்பந்தம் கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுகளின் அரசியல் காரணங்களால்புதுப்பிக்காமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. சுமார் 50 சுற்றுகளுக்கும் மேலான நேரடிப்பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.

நீண்ட போராட்டத்தில் ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாக காவிரி நதிநீர் பங்கீடுதொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் 2002 பிப்ரவரியில் இறுத்தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத்திற்கு நிகரான நடுவர் மன்றத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நடத்தியபோராட்டத்தால் கடந்த 16.02.2018 உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு அளித்தது.உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை செயல்படுத்த கடுமையானபோராட்டங்கள் நடத்தப்பட்டு “காவிரி மேலாண்மை ஆணையம்” அமைக்க வேண்டும்என உத்தரவிட்டது.தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என மத்தியஅரசிதழ் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் 12 ம் தேதியில் காவிரி பாசனத்திற்குமேட்டூர் அணை திறக்கும் வகையில், காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என்றுஅனைவரும் ஒருங்கிணைந்து, ஒரே குரலில் வலியுறுத்தி வரும் நேரத்தில்கமலஹாசன் காவிரி நீர் பங்கீடு பேசலாம் என கருத்துக் தெரிவித்திருப்பது‘வெண்ணெய் எடுக்கும் நேரத்தில் தாழி உடைக்கும்’ செயலாகும் இது தமிழகத்தின்எதிர்கால நலனை பாதிக்கும் செயலாகும்.

அவரது கருத்தை இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை ஆணையம் காவிரிப்பாசனப் பகுதியில் குறுவை சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும்என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x