இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர்

தாயகம் திரும்பிய 5 மீனவர்கள்
தாயகம் திரும்பிய 5 மீனவர்கள்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் நேற்று இரவு தாயகம் திரும்பினர். தொடர்ந்து 5 மீனவர்களும் தனி வாகனம் மூலம் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை அழைத்து வரப்பட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மார்ச் 16-ம் தேதி அன்று கடலுக்குச் சென்ற ஆரோக்கிய சுகந்தன், இஸ்ரேல் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது கைப்பற்றி எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி படகில் இருந்த 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் அந்தோணி (50) என்ற மீனவர் இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்டதால் ஆறு மாதம் சிறை தண்டனை ஊர்காவல் நீதிமன்றதால் அளிக்கப்பட்டு, கொழும்பில் உள்ள வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரது தண்டனை காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட அந்தோணி மற்றும் நவம்பர் 12ம் தேதி அன்று ஊர் காவல் துறை நீதிமன்றதால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 5 பேரும் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வியாழக் கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து 5 மீனவர்களும் தனி வாகனம் மூலம் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை அழைத்து வரப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in