நடிகர் ரஜினிகாந்த் உடன் சீமான் திடீர் சந்திப்பு - தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக தகவல்

நடிகர் ரஜினிகாந்த் உடன் சீமான் திடீர் சந்திப்பு - தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக தகவல்
Updated on
1 min read

சென்னை: போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் களம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதியே ரஜினியை சந்திக்க சீமான் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த சந்திப்பு தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் மாநாடு ஒன்றையும் நடத்தினார். அப்போது திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என்று விஜய் கூறியதை சீமான் கடுமையாக விமர்சித்தார். அதற்கு முன்பு விஜய்யை ஆதரித்து பேசி வந்த சீமான் அதன் பிறகு விமர்சனம் செய்தது சமூக வலைதளங்களில் விவாதமானது.

இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களும் நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மாறி மாறி வார்த்தைகளால் தாக்கி கொண்டனர். இந்த சூழலில் சீமான் ரஜினியை நேரில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in