பொன்னேரி | பழங்குடி இன சான்றிதழ் வழங்க கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்

மலைக்குறவர் இன மக்கள் பழங்குடி இனச் சான்றிதழ் கேட்டு நேற்று பொன்னேரி சார் ஆட்சியர்  அலுவலகம் முன்பு  மூங்கில் கூடைகள் முடைந்து  நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலைக்குறவர் இன மக்கள் பழங்குடி இனச் சான்றிதழ் கேட்டு நேற்று பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மூங்கில் கூடைகள் முடைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பொன்னேரி: திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள ஈகுவார்​பாளையம் ஊராட்​சிக்கு உட்பட்ட கோங்​கல்​மேடு பகுதி​யில் கடந்த 30 ஆண்டு​களுக்கு மேலாக 46 மலைக்​குறவர் இன குடும்​பங்கள் வசித்து வருகின்றன. பழங்​குடி இனத்​தைச் சேர்ந்த இவர்​கள், மூங்​கில் கூடைகளை முடைந்து, அதில் கிடைக்​கும் சொற்ப வருமானத்​தில் குடும்பம் நடத்தி வருகின்​றனர். இவர்​களின் குழந்தைகள் பழங்​குடி இன சான்​றிதழ் இல்லாத​தால் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை உள்ளது.

கோங்​கல்​மேடு பகுதி மலைக்​குறவர் இன மக்கள், பழங்​குடி இனச் சான்​றிதழ் வழங்கக் கோரி வருவாய்த் துறை​யிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்​றனர். இந்நிலை​யில், இவர்கள் நேற்று பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மூங்​கில் கூடைகளை முடைந்து, நூதன போராட்​டத்​தில் ஈடுபட்​டனர்.

தமிழ்​நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்​பில் நடந்த இந்த போராட்​டத்​தில், சங்கத்​தின் மாநில துணைத்​தலைவர் ஏ.வி.சண்​முகம், மாநிலதுணைச் செயலா​ளர்கள் ஆர்.தமிழ்​அரசு, இ.கங்​காதுரை, மாவட்ட நிர்​வாகி கே.மதி, மலைக்​குறவர் பழங்​குடி மக்கள் முன்னேற்ற சங்க தலைவர் ப.ரவி உள்ளிட்ட நிர்​வாகி​கள், பள்ளி குழந்தை​கள், கைக்​குழந்தை​கள், பெண்கள் என, ஏராள​மானோர் பங்கேற்று, கோரிக்கை முழக்​கமிட்​டனர். பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், தமிழ்​நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்​வாகி​களிடம் பேச்சு​வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in