‘ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்’ - தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் முக ஸ்டாலின்
முதல்வர் முக ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்” என கூறியுள்ளார்.

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேசிய பத்திரிகையாளர்கள் தினமான இன்று, உண்மையையும், பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு மத்தியில், பத்திரிகையாளர்களின் தைரியம், ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in