“குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வோம்” - முதல்வர் ஸ்டாலின்

“குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வோம்” - முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: குழந்தைகள் தினம் இன்று (நவ.14) கொண்டாடப் படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். “குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை” என்று முதல்வர் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “மழலை மாறாத சிரிப்புடன் - கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் - சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை!

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான - நலமான - பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம்!

நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in