ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ஈ.கோதண்டம் மறைவு

ஈ.கோதண்டம் | கோப்புப் படம்
ஈ.கோதண்டம் | கோப்புப் படம்
Updated on
1 min read

குன்றத்தூர்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈ.கோதண்டம் (99) உடல்நலக் குறைவால் இன்று (நவ.12) பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ-வான ஈ.கோதண்டம் (99) கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று பிற்பகல் உயிரிழந்தார். இவர் 1989-91 மற்றும் 1996-2001 என இரண்டு முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 1991-ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

கோதண்டம் மறைவுக்கு திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு நாளை (நவ.13) குன்றத்தூரில் நடைபெறுகிறது. இவருக்கு நான்கு மகள்கள் இரண்டு மகன்கள் உள்ளனர். கோதண்டத்தின் மகன் கோ.சத்தியமூர்த்தி குன்றத்தூர் நகராட்சி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in