Published : 04 Jun 2018 07:20 AM
Last Updated : 04 Jun 2018 07:20 AM

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 18 நீர்நிலைகளில் இருந்த 16 டன் குப்பை அகற்றம்: இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையினர் நடவடிக்கை

இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 18 நீர்நிலைகளில் கிடந்த 16.8 டன் குப்பைகள் நேற்று அகற்றப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் ஜூன் மாதம் முழுவதும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தன்னார்வப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள் ளது.

‘நன்னீர் நம்நீர்’

தன்னார்வப் பணியின் ஒரு பகுதியாக ‘நன்னீர் நம்நீர்’ என்ற கருப்பொருளுடன் சென்னை, கோவை, நெல்லை, புதுச்சேரி ஆகிய நகரங்களில் உள்ள நீர் நிலைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் களப் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் மாடம்பாக்கம் ஏரி, நன்மங்கலம் ஏரி, முடிச்சூர் சீகன் ஏரி, கழிப்பட்டூர் ஏரி, கரசங் கால் ஏரி மற்றும் பட்டினப்பாக்கம், திருவான்மியூர் அஷ்டலட்சுமி கோயில், பெசன்ட் நகர்,பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் குப்பைகளை அகற் றும் பணிகள் நடைபெற்றன.

மேலும், கோவையில் கிருஷ்ணாம்பதி ஏரி, புதுச்சேரியில் நல்லவாடு கடற்கரை, ராமேஸ்வரம் கடற்கரை ஆகிய பகுதிகளிலும் குப்பைகளை அகற்றும் களப் பணிகள் நடைபெற்றன.

11-வது ஆண்டாக...

இதுதொடர்பாக இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

எங்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும், உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு, நீர்நிலைகளில் குப்பைகளை அகற்றி வருகிறோம். 11-வது ஆண்டாக மாநிலம் முழுவதும் மொத்தம் 18 இடங்களில் குப்பைகள் அகற்றும் களப்பணி நேற்று நடைபெற்றது. அதில் 3,160 தன்னார்வலர்கள் கலந்துகொண்டு 16.8 டன் குப்பைகளை அகற்றினர். அவை அந்தந்த உள்ளாட்சிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னையில் மட்டும் 11 நீர் நிலைகளில் 1,900 தன்னார்வலர் கள் பங்கேற்று 9 டன் குப்பைகளை அகற்றியுள்ளனர். மேலும், இந்த ஆண்டு ஏதாவது ஒரு பிளாஸ்டிக் பொருளை உபயோகப்படுத்துவதில்லை என அனைத்து தன்னார்வலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட னர்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவான்மியூர் கடற்கரையில் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று குப்பைகளை அகற்றிய சென்னையைச் சேர்ந்த பி.குமார வேலு - பகவத்கீதா தம்பதி கூறும்போது, “சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இக்களப்பணியில் பங்கேற்று குப்பைகளை அகற்றி யது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக இருக்கும் பிளாஸ்டிக் தொடர்பாக எங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்ள இக்களப்பணி ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x