ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தொடங்கியது: முதல் நாளில் 906 ஆசிரியர்களுக்கு ஆணை

ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தொடங்கியது: முதல் நாளில் 906 ஆசிரியர்களுக்கு ஆணை
Updated on
1 min read

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது.

முதல் நாளன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் இருக்கும் காலியிடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது.

முதல் நாளில் 906 முதுகலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் கலந்தாய்வு நடந்தது. இதில் கலந்துகொண்ட 29 பேரில் 4 பேருக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாவட்டத்துக்குள் இருக்கும் காலியிடங்களுக்கு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், வேறு மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in