சாரண, சாரணியர் இயக்கத்தின் 75ம் ஆண்டு விழா - இலச்சினை வெளியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சாரண, சாரணியர் இயக்கத்தின் 75ம் ஆண்டு விழா - இலச்சினை வெளியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாளின் கொடி, சிறப்பு பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ் மற்றும் இலச்சினையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் சாரண, சாரணியர் இயக்கத்தின் 75வது நிறுவன நாள் கொடி, சிறப்புப் பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ் (Bulletin), இலச்சினை (Logo) ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முதல் அறிவிப்பு இதழ்களை வழங்கினார்.

முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பாக 75-வது நிறுவன நாள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்புப் பெருந்திரளணியின் தலைவராக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75வது நிறுவன நாள் ஒட்டுவில்லையை சாரணர்களின் சட்டையில் அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் எம்.பி முரசொலி, மாவட்ட ஆட்சியர்கள் பிரியங்கா பங்கஜம் (தஞ்சாவூர்), பிரதீப் குமார் (திருச்சி), பாரத சாரண, சாரணியர் இயக்க முதன்மை ஆணையர் முனைவர் அறிவொளி, பெருந்திரளணி சிறப்பு அலுவலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் நரேஷ், மாநில தலைமையக ஆணையர்கள் மார்ஸ், சண்முகவேல், முதன்மைக் கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை (தஞ்சாவூர்), கிருஷ்ணபிரியா (திருச்சி), உள்பட பாரத சாரண, சாரணியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்" என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in