Published : 03 Jun 2018 10:00 AM
Last Updated : 03 Jun 2018 10:00 AM

நிபா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம்: சுதாதாரத் துறை வேண்டுகோள்

நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித் தார்.

கேரளாவில் நிபா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. இந்நோயினால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால், நிபா வைரஸ் குறித்த பீதி தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னை மாநகராட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நிபா வைரஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “நிபா வைரஸ் வவ்வால்கள், கால்நடைகள், மனிதர்கள் ஆகியவற்றில் எதன் மூலமாக பரவுகிறது என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை, கால்நடைத் துறை, வனத்துறை ஒன்றாக இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை, தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இந்நோய் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x