புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்க விஜய் திட்டம்?

விஜய்
விஜய்
Updated on
1 min read

சென்னை: புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்க நடிகரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார். அவரது முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் தனது பேச்சில் கொள்கைகள், அரசியல் எதிரிகள் என பல விஷயங்களைக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விஜய்யின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து எந்தவொரு எதிர்வினையும் வெளியாகவில்லை. இதனிடையே, விஜய் கட்சியின் சார்பில் புதிதாக தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதில் தனது கட்சி சார்ந்த செய்திகள், செயல்கள் என அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.

தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல் விஜய்யும் தொடங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. ஆனால், தொலைக்காட்சி சேனல் தொடங்குவது என்பது பெரிய விஷயம். இதற்கான முதற்கட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. இப்போதைக்கு ‘தமிழ் ஒளி’ என்று தனது சேனலுக்கு தலைப்பிட்டுள்ளார்கள். இதே பெயரில் சேனல் உருவாகுமா அல்லது வேறு பெயரில் தொடங்குவார்களா என்பது வரும் காலத்தில் தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in