மாற்றுத் திறனாளிகள் சான்று பெற சென்னையில் நவ.15 வரை சிறப்பு முகாம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பில் 1,731 பேர் மாற்றுத் திறனாளிகள் சான்று பெறவில்லை என கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத் திறனாளி சான்று வழங்க சிறப்பு மருத்துவ முகாம்கள் அரசு மருத்துவமனையில் நவ.15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, வடசென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, எழும்பூர் குழந்தை நல மருத்துவமனை மற்றும் எழும்பூர் கண் மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும். இங்கு மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பங்கேற்று பயனடையலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in