

புதுச்சேரி அருகே திருக்கனூரில், வெறிநாய் கடித்ததால் 6-ம் வகுப்பு மாணவர் ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.
திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளி. இவரது மகன் நவநீத்(11). அதே பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து நவநீத் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று நவநீத்தை கடித்தது. இதில் காய மடைந்த அந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதிலும் நவநீத் நடவடிக் கைகளில் வித்தியாசம் காணப் பட்டது. இதனால், குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து நவநீத்தை மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், நவநீத்தை கடித்தது வெறிநாய் என்றும் அதனால் அவருக்கு வெறி நோய் (ரேபீஸ்) தாக்கியிருப்பதையும் அறிந்தனர். இதையடுத்து புதுவை அரசு மருத்துவமனையில் நவநீத் அனு மதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு நவநீத் இறந்தார். இதைத் தொடர்ந்து, நவநீத் குடும்பத்தி னருக்கும் வெறிநோய் (ரேபீஸ்) சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.
அதிகரிக்கும் தெரு நாய்கள்
காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வீரராகவன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுவதாவது:
‘புதுவை மாநிலம் முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை கணிச மாக அதிகரித்துவிட்டது. நாய்க ளுக்கு வெறிபிடித்து அவை பொது மக்களை கடித்துவருகின்றன. இதனால் உயிர்க்கொல்லி நோயான வெறிநோய் (ரேபீஸ்) பரவி வருகிறது.
கூனிச்சம்பட்டு மாணவர் நவநீத் வெறிநாய் கடித்து வெறிநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது சோகத்துக்குறிய ஒன்றாகும். அவருடைய தாய் சுதா, சகோதரன் விஜய், சகோதரி சூசை ஆகிய 3 பேருக்கும் வெறிநோய் பரவி சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே சுகா தாரத் துறை, உள்ளாட்சி, கால் நடை பராமரிப்புத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை தாமத மின்றி செயல்பட வேண்டும். உயிர்க்கொல்லி நோயான வெறிநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். தெருநாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை களை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அரசு அதிகாரிகள் அலட்சியம் காண்பிக்க கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.