ஆட்சியர் உத்தரவிட்டும் மூடப்படாத டாஸ்மாக் கடைகள்: உயர் நீதிமன்ற எச்சரிக்கையால் நிரந்தரமாக மூடல்

கடை
கடை
Updated on
1 min read

மதுரை: சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டும் சாலைக்கிராமத்தில் மூடப்படாத இரு டாஸ்மாக் கடைகள் உயர் நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து நிரந்தரமாக மூடபட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைக்கிராமத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சாலைக்கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இயங்கி வரும் இரு டாஸ்மாக் மதுபான கடைகளை ( கடை எண்கள்: 7637, 7638) வேறு இடத்துக்கு மற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவின் பேரில் இரு கடைகளையும் இட மாறுதல் செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 2.9.2024ல் உத்தரவிட்டார். இருப்பினும் டாஸ்மாக் அதிகாரிகள் இரு கடைகளையும் இடமாறுதல் செய்யாமல் உள்ளனர். இந்த மதுபான கடைகள் தொடர்ந்து செயல்படுவதால் மக்கள் பல்வேறு தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர். எனவே, ஆட்சியர் உத்தரவு உத்தரவிட்டும் டாஸ்மாக் மதுபான கடைகளை இடமாற்றம் செய்யத டாஸ்மாக் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீதர், நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதியத்துக்குள் இரு கடைகளையும் மூடாவிட்டால் அதிகரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்து, விசாரணையை ஒத்திவைத்தார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு கடைகளையும் நிரந்தரமாக மூடப்பட்டு, அவற்றை வேறு இடத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு மனுவை முடித்து வைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in