

சென்னை: கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2024-ஐ முன்னிட்டு, இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும் இணைய வழியிலான விழிப்புணர்வு நிகழ்வு நவ. 3-ம் தேதி நடைபெற உள்ளது.
அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2024’ நடத்தப்படுகிறது. இதையொட்டி, நவ. 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு இணைய வழியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த வெப்பினாரில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. வரும் நவ. 3 மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்தவெப்பினாரில் ‘வளமான தேசத்துக்கு நேர்மை எனும் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் வருமான வரித்துறை ஆணையர் கே.நந்தகுமார், இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உரையாற்ற உள்ளனர்.
ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் நோக்கத்தை அனைத்து தரப்பினரிடமும் கொண்டுசெல்லும் நோக்கில் இந்த வெப்பினார் நடைபெறுகிறது. இந்த வெப்பினாரில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/IBWEBINAR2024 என்ற லிங்க் மூலமாக அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 99402 68686 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.