“சமூக நல்லிணக்கம் பேணியவர்” - முத்துராமலிங்க தேவர் குரு பூஜை குறித்து விஜய் பகிர்வு

“சமூக நல்லிணக்கம் பேணியவர்” - முத்துராமலிங்க தேவர் குரு பூஜை குறித்து விஜய் பகிர்வு
Updated on
1 min read

சென்னை: “முத்துராமலிங்கத் தேவர் சமூக நல்லிணக்கம் பேணியவர். மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். அந்த வகையில் நடிகர் விஜய் குரு பூஜையை ஒட்டி சமூகவலைதளத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in