‘ஈடுசெய்ய இயலாத இழப்பு’ - விபத்தில் உயிரிழந்த தவெக தொண்டர்களுக்கு விஜய் இரங்கல்

‘ஈடுசெய்ய இயலாத இழப்பு’ - விபத்தில் உயிரிழந்த தவெக தொண்டர்களுக்கு விஜய் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: தவெக மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க அக்கட்சியின் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டி வி.சாலைக்கு பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் போது ஏற்பட்ட விபத்தில் கட்சி தொண்டர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்கள் மறைவுக்கு கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள், வழக்கறிஞர் கில்லி விஎல்.சீனிவாசன் (திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்), ஜேகே.விஜய்கலை (திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்), வசந்தகுமார் (கழக உறுப்பினர் - சென்னை), ரியாஸ் (கழக உறுப்பினர் - சென்னை), உதயகுமார் (கழக உறுப்பினர் - செஞ்சி) மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சார்லஸ் (கழக உறுப்பினர் - சென்னை) ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ஈடுசெய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்துக்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in