“எங்கள் கவனம் சிதறாது!” - திமுக மீதான விஜய் விமர்சனத்துக்கு மா.சுப்பிரமணியன் பதில்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப்படம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என்று திமுக மீதான தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யின் விமர்சனம் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் விமர்சனம் செய்துள்ளது பற்றி சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டாய் கடந்து தமிழகத்துக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர்.

திமுகவை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் சைதாப்பேட்டையில் வளர்ச்சி பணிக்கு ஒரு சிறு துரும்பைகூட எடுத்து போட்டு இருக்க முடியாது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளும் திமுகவால் வளர்ச்சி பெற்று உள்ளது. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும், மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என்றார்.

முன்னதாக, தவெக மாநாட்டில் விஜய் பேசும்போது, “மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in